About Us

image3

மத்யமர் - "சமூக ஊடகத்தின் ஒரு புதிய பரிமாணம்."  


மத்யமர் என்னும் சொல் எழுத்தாளர் சுஜாதாவால் முதன்முதலில் பிரயோகம் செய்யப்பட்டது. இது மத்தியவர்க்க மக்களை, அவர்களின் பொதுவான மனப்பாங்கைக் குறிக்கும்.   


தம் பிரச்சினைகளுக்காக வீதிக்கு இறங்கிப் போராட மனமின்றி உள்ளத்துக்குள் குமையும் middle class எனப்படும் மத்திய வர்க்க மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்கான ஒருங்கிணைந்த குரலாய் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கம்.  


பிறந்த கதை

சமூக ஊடகத்தில் நடுநிலையோடு , புதியதொரு மாற்றுக் கோணத்தில் தன் வாதங்களைத் திறம்பட எழுதும் திரு.ஷங்கர் ராஜரத்தினம் அவர்களின் ஆயிரக்கணக்கான வாசக நண்பர்களுடன் மத்யமர் முகதூல் குழு 2018 ஜனவரி இறுதியில் துவங்கப்பட்டது.  வளர்ந்த கதை: பல்வேறு புதிய பரிமாணங்களோடு தானே தன் வளர்ச்சியை நிர்மாணித்துக் கொள்கிறது, மத்யமர் இன்னும் இத்தளம். இருபதாயிரம் உறுப்பினர்களோடு , பல்வேறு நாடுகளிலும், நகரங்களிலும், கிராமங்களிலும் வியாபித்துள்ள மத்யமரின் குரல் ஒன்றிணைந்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது.  


எழுத்துப் பாசறை: 

வாரம் ஒரு சிறப்புத் தலைப்பு கொடுத்து பலரின் எழுத்துத் திறமையை வெளிக்கொணர்ந்து , அவர்களை ஊக்குவித்து பாராட்டி சான்றிதழ் வழங்கி வருகிறது இக்குழு. இக்குழுவின் உறுப்பினர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்து மத்யமர் சிறுகதைகள் தொகுதி-1 அச்சில் வெளிவந்துள்ளது. மேலும் சமையல் , ஆன்மீகம், சுற்றுலா, சாதனைகள் , விளையாட்டு, அரசியல் என பல புத்தகங்கள் வெளியிடும் அளவு எழுத்துப் புதையலை தன்னுள்ளே வைத்துள்ளது இத்தளம்.   


வெளிச்சம்:  

FB live மூலமாக , ஒரு மணி நேர நேரடி நேகழ்ச்சிகளை வழங்குகிறது மத்யமர். மருத்துவம், காப்பீடு, அரசியல் என நேயர்கள் தம் கேள்விக்கணைகளை வீசி பங்கு பெறும் விதமாக, சுவாரசியமான பரபரப்பான "வெளிச்சம்" நிகழ்ச்சிகள் மத்யமரின் "ஹை லைட் ".  


மத்யமர் சமூகப் பணி: 

கஜா புயலின் போது உலகெங்கிலும் இருந்து தம் உதவிகளைக் குவித்த மத்யமரின் அறப்பணியை வெளிப்படையான சரியான முறையில் நிர்வகித்து செயல்படுத்த மத்யமர் சாரிடீஸ் என்னும் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.  


தனித்திறமைகள்:  

எண்ணற்ற தனித்திறமைகள் கொட்டிக்கிடக்கின்றன , மத்தியத்தர மக்களிடம். தம் ஆசைக் கலைகளை மறந்து மரத்துப் போன மனங்களை உயிர்த்து எழச் செய்து அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்த இத்தளம், "மத்யமர் டீவி "  என்னும் யூ ட்யூப் சானல் வழியாக  பல சுவையான , உபயோகமான நிகழ்ச்சிகளை, விவாதங்களை, தனித்திறமைகளை வழங்க உள்ளது.   


மத்யமர் - எதிர்காலம் 

இத்தளம் அடிப்படையில் சாத்வீகமான மிகச்சிறந்த பண்புகளை , ஒழுக்கத்தை உடைய மத்தியவர்க்க மக்களின்ஒருங்கிணைந்த சக்தி மற்றும் குரல். மத்திய தர மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் ஒரு சங்கமாக, (union) இது வளர வேண்டுமெனில் உலகெங்கிலும் உள்ள நாம் ஒன்று படவேண்டும். எதிர்காலத்தில் அரசியல் சமூக அரங்கில் கவனிக்கப்படும், செல்வாக்குள்ள சக்தியாக நாம் உறுப்பெற மிக அதிக அளவில் இக்குழுவில் பங்கேற்று நம் கருத்துகளை , தேவைகளை, தீர்வுகளை முன் வைப்போம். பல்லாயிரக்கணக்கான மத்தியத்தர மக்களின் ஒருங்கிணைந்த இக்குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வது, நம் வீட்டின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, இந்நாட்டின்  எதிர்காலத்துக்கும் அஸ்திவாரமாக பலம் சேர்க்கும். 

ADMIN TEAM

Shankar Rajarathnam

Chief Administrator

Core Team

  • Dr Rohini Krishna
  • Revathi Balaji 
  • Swaminathan Ramasubramanian
  • Sivasankaran Sundaresan
  • Meenakshi Olaganathan
  • Keerthivasan Rajamani