Welcome, Madhyamar !

 நடுத்தரவர்கத்தின் குரல்

 'மத்யமர்' என்ற சொல், நடுத்தரவர்க்க, மிதவாத மக்களைக் குறிக்கும். மத்யமருக்கென்றே பிரத்யேகமான, மத / ஜாதி / சமூக / அரசியல் சார்பு அற்ற இந்தக் குழுமத்தின் நோக்கம்: 


        நடுத்தரவர்க்க மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வது.


        நடுத்தரவர்க்க மக்களின் நன்மைக்காக பல வகையான ஆக்கபூர்வ முயற்சிகளில் ஈடுபடுவது.


        மத்யமர் நாம் ஒன்று சேர்ந்து சமுதாய வளர்ச்சிக்கு நம் பங்கைச் செய்வது. 

JOIN MADHYAMAR

Madhyamar Charities

image3

The Charities Wing of Madhyamar is aimed at being a platform for Middle Income groups to contribute to the Education and Upbringing of the really needy Young ones, to brighten their future and nurture the hope

Madhyamar Publications

image4

Madhyamar is a place where the reader becomes a writer. And the writers become published Authors. Madhyamar Publications offer a launch pad for budding writers to print their best work (fiction or non-fiction)

Madhyamar TV

image5

Madhyamar TV is a YouTube Channel that showcases the talents of Madhyamar. It also features "வெளிச்சம்"- a  Live interactive discussion with authorities of different fields. Live feeds of Madhyamar programs, showcased here.

Madhyamar Annual Meet, 2019

மகளிர் திருவிழா

image6

Geethmala Raghavan reports

பிப்ரவரி 3 2019 அன்று நம்முடைய ஆண்டுவிழாவிற்கு வருகை தந்திருந்த லேடிஸ் ஸ்பெஷல் பத்திரிக்கை ஆசிரியர் திருமதி கிரிஜா ராகவன் இங்கு பெண்களுக்கு கிடைத்திருந்த பாதுகாப்பையும், மேலும் இந்த தளத்தில் பெண்களின் அதீத பங்களிப்பையும் கண்டு வியந்து, தாங்கள் கொண்டாடிய மகளிர் தினத்தன்று நம் மத்யமர் குழுவிலிருந்து நம்முடைய அட்மின் திருமதி மீனாக்ஷி ஒலகநாதன் தலைமையில் ஒரு கருத்தரங்கம் நடத்த அழைப்பு விடுத்தார். 


அதன்படி மார்ச் 16 2019அன்று வெஸ்ட் மாம்பலத்தில் ஷோபனா அரங்கத்தில் நடந்த பெண்கள் தின கொண்டாட்டத்தில் நம்முடைய மத்யமர் தளத்தின் சார்பில், திருமதி. மீனாக்ஷி ஒலகநாதன், திருமதி. செல்வி ஷங்கர், திருமதி. பூமா ஷ்யாம்சுந்தர், திருமதி. கீத்மாலா ராகவன், திருமதி. அபர்ணா முகுந்தன், திருமதி. நிரஞ்சனா பாலு, திருமதி. நிம்மி சுரேஷ், திருமதி, ஜெயா ரங்கராஜன், திருமதி ரேவதி சிங், திருமதி. கிரிஜா, திருமதி. விஜயலக்ஷ்மி கிருஷ்ணன் கலந்துகொண்டனர். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நம்முடைய மத்யமர் தளத்தின் அட்மின் திரு,. சங்கர் ராஜரத்தினம் அவர்களும், திரு. ஸ்வாமிநாதன் ராமசுப்ரமணியம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 


பெண்கள் எவ்வாறு கிடைக்கும் வருமானத்தில் சேமிக்கும் திறன் உடையவர்கள் என்றும், தற்காலத்தில் உள்ள சேமிப்பு வழிமுறைகளைப் பெண்களும் பின்பற்றவேண்டும் என்றும் திருமதி. செல்வி அவர்கள் பேசினார். மார்ச் 16 அன்றுதான் அனைத்து மகளிர் காவல் நிலையம் துவங்கப்பட்டதையும், ராணுவத்தில் அனைத்து படைப்பிரிவுகளிலும் கோலோச்சும் பெண்கள் பற்றியும், லிபேரியா நாட்டிற்கு ஐநா சார்பில் அனுப்பப்பட்ட காவல்துறையில் இந்தியமகளிர் காவலர் 105 பேரின் சாதனை பற்றியும் திருமதி. பூமா விவரங்களைத் தொகுத்தளித்தார்


வெறும் அழகுக்காகவும், விளம்பரப் பொருளாகவுமே பயன்படுத்தப்பட்ட மகளிர் இன்று அதே ஊடகத்துறையில் கொடிகட்டிப் பறக்கும் விந்தையைப் பற்றியும், அதற்கு லேடிஸ் ஸ்பெஷல் ஆசிரியர் திருமதி கிரிஜா ராகவனே நல்ல உதாரணம் எனவும் திருமதி கீத்மாலா தனது உரையில் குறிப்பிட்டார். மேலும் வலைத்தளங்களில் எவ்வாறு பாதுகாப்போடு செயல்படவேண்டும் என்பது பற்றியும் அறிவுறுத்தினார். குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் காட்டும் நலனை தமது உடல்நலனிலும் காட்டவேண்டும் என்றும் பெண்களின் ஆரோக்கியமே, குடும்ப ஆரோக்கியத்துக்கும் வீட்டு நலனுக்கும் வழி வகுக்கும் என்றும் திருமதி நிரஞ்சனா வலியுறுத்தினார்.


குழந்தைகள் மனநலன் பற்றிப் பேசிய திருமதி அபர்ணா,  எவ்வாறு குழந்தைகளை அன்பான தொடுதல் மூலமாக தாய் சிறப்பாக வளர்க்கமுடியும் என்றும் அதன் மூலமாக குழந்தைகள் எத்தகைய பாதுகாப்பு உணர்வையும், சிறந்த மனநலன்களையும் பெறுகிறார்கள் என்று அற்புதமாக விளக்கினார். இசை என்பது பெண்களுக்கு இயல்பாகவே வருவது என்றும் தாலாட்டு பாடுவதிலிருந்து பெண்கள் இசையோடு பயணிக்கிறார்கள் என்று ஆரம்பித்து இசைத்துறையில், எம்.எஸ், அம்மா முதல் இன்று கொடிகட்டிப்பறக்கும் பின்ணணிப் பாடகிகள் வரை தனது உரையில் குறிப்பிட்டார் திருமதி நிம்மி சுரேஷ். பெண்கள் எவ்வாறெல்லாம் இன்று இருக்கும் எத்தனையோ சேமிக்கும் வழிமுறைகளில் பணத்தை முதலீடு செய்யலாம் என்பது பற்றியும் ம்யூச்சுவல் பண்ட்ஸ் திட்டங்கள் பற்றியும் சிறப்பாக பதிவு செய்தார் திருமதி ரேவதி சிங். பேச்சுத்துறை மற்றும் எழுத்துத்துறையில் எவ்வாறு பெண்கள் கோலோச்சுகின்றனர் என்று பாரதி பாஸ்கர், விசாகா ஹரி, சுதா சேஷய்யன், மற்றும் சிவசங்கரி அனுராதா ரமணன் போன்ற சாதனைப் பெண்களை உதாரணம் காட்டி முழங்கினார் திருமதி கிரிஜா.


இன்றைய காலகட்டத்தில் சமூகத்தை சார்ந்தே பெண்கள் வாழவேண்டியிருப்பது பற்றியும், பெண்களுக்கென்றே இயற்கையாக உள்ள இயல்பான எச்சரிக்கை உணர்வினைப் பின்பற்றி எவ்வாறு அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றியும் திருமதி. விஜயலக்ஷ்மி பேசினார். எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல திருமதி ஜெயா ரங்கராஜன் பெண்களின் வாழ்வில் ஆண்களின் பங்கு என்ற தலைப்பில், எப்படி குடும்பத்தில் உள்ள ஆண்கள்,  பெண்களுக்கு ரோல்மாடலாக அமைகிறார்கள் என்றும் அதுவே பிற்காலத்தில் பெண்கள், தம் வாழ்வின் முக்கியமான தருணங்களைத் தீர்மானிக்கும் நிலையைத் தோற்றுவிக்கின்றது என்பதையும் அழகாக விளக்கினார். இறுதியாக நமது அட்மின் திருமதி மீனாக்ஷி ஒலகநாதன், நமக்கு இந்த வாய்ப்பளித்த திருமதி கிரிஜா ராகவன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து நினைவுப்பரிசளித்து கௌரவப்படுத்தினார். 


மேலும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பாக விளங்கும் நமது மத்யமர் தளம் பற்றித் தெரிவித்து அதில் பங்கெடுத்துக்கொள்ள அங்கிருந்த மகளிரை வரவேற்று பேசியபின் நமது கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது. 

Madhyamar in the news

From Shankar Rajarathnam

 

இந்த மாத 'லேடீஸ் ஸ்பெஷல்' மாதாந்தரியில், நம் மத்யமர் விழா பற்றிய கட்டுரை..! பத்திரிக்கை நாளை கடைகளில் கிடைக்கும்..!


அட்டைபடத்தில் நம் Meenakshi Olaganathan..!


மத்யமர் விழாவிற்கு லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியரும், Mediaவில் பல ஆண்டுகளாக நாம் நன்கு அறிந்த Entrepreneur, Journalist, திருமதி. Girija Raghavan அவர்கள் வந்திருந்தார். அவருக்கு மத்யமர் குழுவின் தாக்கமும் வளர்ச்சியும் வியப்பு தர, எங்களிடம் பேசி, தம் பத்திரிக்கையில் இந்தக் கட்டுரை இட்டிருக்கிறார்..! அவருக்கு நம் மனமார்ந்த நன்றிகள்..!


திருமதி கிரிஜா ராகவன் அவர்கள், தம் 'லேடீஸ் ஸ்பெஷல்', நம் மத்யமர் குழுவோடு சேர்ந்து சில புதிய முயற்சிகள் செய்யவும் விழைகிறார்..! விரைவில் அறிவிக்கிறோம்..!

image7