Project #1

நண்பர்களே..!

இது ஒரு முக்கிய செய்தி. தயவு செய்து தவறாமல் படியுங்கள்..!

Madhyamar Charities மூலமாக, ஏழை மாணவர்கள் கல்விக்கான உதவிகள் செய்யத் தீர்மானிக்கப்பட்டது குறித்து ஏற்கனவே சொல்லியிருந்தோம்.

சிறுகளத்தூர் உயர்நிலைப் பள்ளி என்ற ஒரு அரசாங்கப் பள்ளி, சென்னை குன்றத்தூர் அருகில் உள்ளது. அதற்குத் தனியாக பில்டிங் கட்ட அரசாங்கம் திட்டமிட்டும், அதற்கென கொடுக்கப்பட்ட நிலத்தில் ஏதோ சட்டச் சிக்கல் உருவானதால், பில்டிங் கட்டமுடியவில்லை. அதனால் கடந்த 4 வருடங்களாக, 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அங்கே உள்ள ஆரம்பநிலைப் பள்ளி (Primary School) வளாகத்துக்குள்ளேயே நடைபெறுகின்றன.

நாங்கள் அதை இரண்டு முறை சென்று பார்த்தோம். ஸ்கூல் திறந்ததும் மறுபடியும் சென்று பார்த்தோம்: அங்கே , மரத்தடியில் வெட்ட வெளியில் வகுப்புகள் நடந்து கொண்டிப்பதைப் பார்த்தோம். மழை பெய்தால் கிளாஸே கிடையாதாம்..! ஒரு தொண்டு நிறுவனம் அங்கே ஒரு ஷெட் போட்டுக் கொடுத்திருக்கிறது. ஆனால் சுவர்கள் இல்லை, சிமெண்ட் தரை இல்லை. டீச்சர் பேசுவது மாணவர்களுக்குக் கேட்பதில்லை.

கீழிருக்கும் வீடியோ பாருங்கள் நண்பர்களே..!

அந்தப் பள்ளியின் HM, திருமதி பாலின் நிர்மலா அவர்கள் நம்மிடம், கிளாஸ்ரூமகள் கட்டித் தந்தால் மாணவர்களுக்கு இன்னும் சிறப்பாக வகுப்பெடுக்க முடியும் என்று சொன்னார்.

நாம் நம் மத்யமர் சாரிடீஸின் மூலமாக அந்த ஷெட்டின் அடியில் இரண்டு கிளாஸ்ரூம்கள் - நாற்புறமும் சுவர் கட்டி, ஜன்னல் கதவுடன், கீழே நல்ல சிமெண்ட் தரையும் போட்டு - கட்டித்தர முடிவெடுத்தோம் . நம் மத்யமர் மெம்பர் திரு.Babu Sabapathi அவர்கள் அதைக் கட்டித் தர ரூ.200000/- செலவாகும் என்று சொன்னார். ஒத்துக் கொண்டோம். இந்த வாரம் கிளாஸ் ரூம்கள் கட்டட வேலை ஆரம்பிக்கும்..!

இந்த நல்ல காரியத்திற்கு உதவி செய்ய விரும்புபவரகள், கீழ்கண்ட பாங்க் அக்கவுண்ட்டிற்கு தங்களால் இயன்ற பணம் ட்ரான்ஸ்ஃபர் செய்யக் கோருகிறோம்..! செய்து விட்டு, இந்தப் பதிவின் கீழே கமெண்டில் Money transfer செய்த விவரத்தை கமெண்ட்டாக இடக் கோருகிறோம்.

-----------------------

Current account Name: MADHYAMAR CHARITIES.
Bank : AXIS BANK
Branch : MOGAPPAIR BRANCH
Account No. : 919020009592107
IFSC CODE : UTIB0000345
Beneficiary Mail Id : Shankar@madhyamar.com
Beneficiary Phone Number : 9003085089
-----------------------

நாம் செய்யும் இந்த உதவி, அந்தப் பள்ளியில் படிக்கும் 215 ஏழை மாணவ மாணவிகள், மேலும் நன்றாகப் படிக்க உதவும்..!

மிக்க நன்றி நண்பர்களே..!

- Shankar Rajarathnam

MADHYAMAR CHARITIES

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே

என்பது எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
சில வரிகளிலேயே பக்தி, ஜீவ காருண்யம், ஈகை, இன்சொல் உரைத்தல் போன்ற values எத்தனை அழகாக சொல்லப் பட்டு விட்டன!

எதற்கு இந்தப் பீடிகை?...விஷயத்திற்கு வருகிறேன்

மத்யமர் சந்திப்பு முடிந்து ஒரு மாதமாகி விட்டது. நாம் அன்று முன்னெடுத்த நான்கு முனைப்புகளில் ஒன்று ‘மத்யமர் அறக்கட்டளை’. அனுபவமும் ஆர்வமும் கொண்ட சிலருடன் இணைந்து ஒரு குழு அமைத்து ‘யாருக்கு உதவலாம் ? என்னென்ன விதங்களில் உதவலாம் ? பணம் திரட்டும் வழிகள் என்ன?’ எனப் பல விஷயங்களையும் விவாதித்து வருகிறோம்.முதற்கட்டமாக ‘ஏழை மாணவருக்கு கல்வி’ என்பதை focus செய்ய முடிவெடுத்துள்ளோம். வரும் கல்வியாண்டில் இருந்து நம் பணிகள் தொடங்கும்.

அன்றே அநேகம் பேர் அறப்பணிகளுக்கு நன்கொடை அளிக்க ஆர்வமாக இருந்தனர்.ஓரிருவர் உடனடியாக பணமும் அளித்தனர். நன்றி!
நீங்கள் ஆவலுடன் கேட்டுக் கொண்டபடி...
(அடேங்கப்பா..ரஜனி பட ரேஞ்சுக்கு பில்டப்!😀)
வங்கிக் கணக்கு விவரங்கள் இதோ:
கஜா புயலை விட வேகமாகப் பணம் அனுப்பி தங்கள் சமூக கடமையை ஆற்றிய மத்யம நண்பர்கள் இதற்கும் மனமுவந்து தங்களால் இயன்ற பொருளுதவி அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!

Once again I assure you there will be absolute transparency

வாருங்கள்...ஊர் கூடித் தேர் இழுப்போம்!

- Meenakshi Olaganathan

Madhyamar Admin Team

Contribute

Send in your Contributions to

Current A/c Details

MADHYAMAR CHARITIES.
AXIS BANK
MOGAPPAIR BRANCH
A/C NO. 919020009592107
IFSC CODE - UTIB0000345